திங்கள், 23 பிப்ரவரி, 2009

தொண்டன்

தொண்டன்

கைபிடித்த மனைவிக்கு கஞ்சி ஊற்ற வக்கில்லாதவன்
கட்சித் தலைவனுக்கு கட்டவுட்
வைக்கிறான்

வழங்கியவர்: அபூ முனீறா, கோட்டாறு

சுற்றுப்புறச் சூழல்


சுற்றுப்புறச் சூழல்

சுற்றுபுறத்து சூழ்நிலைகள்
சுகமாய் இருக்கச் செய்திடுவீர்!
சுகாதாரத்திற்கு சுதந்திரம் தந்து
சுக ஆரோக்கியமாய் வாழ்ந்திடுவீர்!
காடு வளர்ந்தால் நாடு செழிக்கும்
காடு அழிந்தால் நாடு கொதிக்கும்
வீட்டையும், நாட்டையும் காப்பது போல் காட்டையும் கண்ணாய்க் காத்திடுவீர்!
நாடு செழிக்க மரம் நடுவீர்!
நலமாய் வாழ வழி வகுப்பீர்!


கவிதை வழங்கியது: அபூ முனீறா, கோட்டாறு

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009

எய்ட்ஸ்


எய்ட்ஸ்

உந்தி வரும் வீரியத்தை சிந்த இடம் தேடுபவன்
சிறந்ததையா தேடிடுவான்? கிடைத்ததெதுவோ போதுமென்பான்
காமத்திற்கு கண்ணேது? எண்ணிபணத்தை கொடுத்துவிட்டு
எய்ட்ஸை அள்ளி கொண்டு வந்திடுவான்
அற்ப சுகம் தணிந்தாலும் அவன் ஆயுள் வரை அவஸ்தை தான்


எழுதியவர்: அபூ முனீறா, கோட்டாறு